பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கைதி கார்த்தியின் மகளா இது! மாடர்ன் உடையில் எப்படியிருக்காரு பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!
கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் கைதி. இதில் ஹீரோவாக கார்த்தி நடித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், நரேன், அர்ஜூன் தாஸ், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தந்தை - மகள் பாசப் போராட்டத்துடன், ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்ட வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்றது. பாடல், ஹீரோயின் இல்லாவிட்டாலும் படம் மக்களைப் பெருமளவில் கவர்ந்து ஹிட்டானது.
#Vikram The Movie Shooting Spot Click #Kaithi2 🥰👌🔥💥 @Karthi_Offl @Dir_Lokesh pic.twitter.com/4MArIapL8A
— Karthi Updates™ (@KarthiUpdates) June 5, 2022
விரைவில் கைதி 2 ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் கைதி படத்தில் கார்த்தியின் மகளாக, பாவாடை சட்டையுடன் அப்பாவி முகத்துடன் வந்த சிறுமியின் மாடர்ன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் தீனா மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் அந்த சிறுமி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.