பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கார்த்தி நடிக்கும் கைதி படத்தில் அந்த முக்கியமான விஷயம் இருக்காதாம்! என்ன தெரியுமா?
மாநகரம் என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கைதி என்ற படத்தில் நடித்துவருகிறார் கார்த்தி. சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து வரும் தீபாவளிக்கு படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி அன்று அட்லி இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துவரும் பிகில் படமும் வெளிவர இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் கைதி திரைப்படம் வித்தியாசமான கதைக்களம் கொண்டப்படமாக இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினே கிடையாதாம். முழுக்கு முழுக்க ஹீரோவை மட்டுமே மையமாக கொண்ட ஆக்சன் படமாக இருக்கும் என கூறியுள்ளனர். மேலும் இந்த படம் பற்றி ஒரு வார்த்தையில் கூறவேண்டும் என்றால் ஹாலிவுட் படமான பர்ஜ் நினைவிற்கு வரலாம் என்று கூறப்படுகின்றது.