திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட..வித்தியாசமா இருக்கே! கமல் 234 படத்தில் தலைப்பு இதுவா.! வெளிவந்த அறிவிப்பு!!
பிரபல முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘நாயகன்’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்து கமலின் 234 படம் உருவாகிறது.
இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். மேலும் படத்தில் துல்கர் சல்மான், திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இதற்கிடையில் KH 234 படத்தின் தலைப்பு இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. படத்திற்கு Thug Life என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனை படக்குழு தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது.
A NEW NAME, A NEW HISTORY!#thuglife
— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2023
➡️https://t.co/f2s709GhTC#KH234 #Ulaganayagan #KamalHaasan #HBDKamalSir #HBDUlaganayagan @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @actor_jayamravi @trishtrashers @dulQuer @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_… pic.twitter.com/zuAGZFtC76