மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கமல் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகிவிருக்கும் KH 234 படத்தின் தலைப்பு வெளியானது" கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பெயர் பெற்றவர் கமலஹாசன். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறமை மிக்கவர்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் திரையரங்கில் வெளியாகிய மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. மேலும் 'விக்ரம்' திரைப்படம் கமலின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.
இது போன்ற நிலையில், இப்படத்திற்கு பின்பு கமல் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது சங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்து வரும் கமல், இப்படத்திற்குப் பின்பு கமல், Hவினோத் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருகிறார்.
மேலும் இப்படத்தை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் KH 234 எனும் தற்காலிக தலைப்பை கொண்ட திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் தலைப்பு மிரட்டலான வீடியோவுடன் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கமல் கேங்ஸ்டராக நடிக்கும் இந்த திரைப்படத்தில் தலைப்பு 'thug life' என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.