மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படியெல்லாம் எதுவுமில்லை! வெளிப்படையாக போட்டுடைத்த தாம் தூம் நடிகை! என்ன விஷயம் தெரியுமா??
இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக தயாராகியுள்ளது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். தமிழில் தாம்தூம் படத்தில் நடித்த அவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அதன் ஹிந்தி ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட கங்கனா பேசுகையில், நம் நாட்டில் நடக்கும் பல பிரச்சினைகள் குறித்து நான் வெளிப்படையாக பேசி வருகிறேன். விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தும் பேசுகிறேன். அதனால் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டது என பலரும் கூறுகின்றனர். ஆனால் அப்படி எதுவுமில்லை. ஒரு சாதாரண குடிமகளாகதான் நான் எனது கருத்துக்களை கூறி வருகிறேன். எனக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.