53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
எனக்கு கூச்ச சுபாவம் உண்டு; அந்த மாதிரி காட்சிகளில் என்னால் சகஜமாக நடிக்க முடியாது - பிரபல நடிகை ஓபன் டாக் !!
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால், தற்போது கீர்த்தி சுரேஷ்க்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
இதுகுறித்து கீர்த்தி கூறுகையில், தன்னை தேடி நல்ல கதைகள் வருவதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அதிர்ஷ்டம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதே நேரத்தில் திறமையும் முக்கியம். சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிறகு அழுத்தமான கதைகளில் நடிக்க வாய்புகள் வருகிறது.
இதனால் கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். கதைகள் கேட்கும்போது இதில் நடிக்கலாம் என்று மனது சொன்னால் அதை ஏற்கிறேன்.
ஆனால் முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. கோடி பணம் கொடுத்தாலும் அதுபோன்ற காட்சியில் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும். முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்றதால் சில நல்ல படங்களில் நடிக்கும் வாய்புகள் கைநழுவி சென்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு சவுகரியமாக இல்லாத காதாப்பாதிரங்களில் நடிக்க மாட்டேன். கதைக்கு தேவையான் இருந்தாலும் சம்மதிக்க மாட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. முத்த காட்சிகளில் என்னால் சகஜமாக நடிக்கவும் முடியாது என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.