திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அடுத்த விஜயகாந்த் இவருதான்" - 150க்கும் மேற்பட்ட உயிர்களை தத்தெடுத்த KPY பாலாவை பாராட்டும் நெட்டிசன்கள்.!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தற்போது மிகப்பெரிய நட்சத்திரமாக ஒளிருபவர் கேபிஒய் பாலா.
பெருவெள்ளத்தில் உதவிய பாலா
கஷ்டப்படுபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வரும் பாலா சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது தன்னிடம் இருந்த சேமிப்புத் தொகையினை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்ச ஆதார தொகையாக வழங்கினார்.
இதையும் படிங்க: நாயகி சீரியல் வில்லன் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்.!!
நடிகருடன் இணைந்து பெண்ணுக்கு உதவி
அதனைத் தொடர்ந்து பல்வேறு நன்மைகளை மக்களுக்கு செய்து வந்தவர், நடிகர் ராகவா லாரன்சுடன் இணைந்து பெண் ஒருவருக்கு ஆட்டோவையும் வழங்கி அவரின் வாழ்வாதாரத்திற்கு விளக்கேற்றி இருந்தார்.
காயங்களுடன் வாழும் உயிர்களை தத்தெடுத்த பாலா
இந்நிலையில் தற்போது அவர் காயங்களுடன் வாழ்ந்து வரும் 150-க்கும் மேற்பட்ட நாய்களை தத்தெடுத்து இருக்கிறார். இது தொடர்பான தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகவும் பகிர்ந்துள்ளார்.
விஜயகாந்தின் மனம் ஒத்த செயல்
கண்ணில் பார்க்கும் நபர்களுக்கெல்லாம் உதவி செய்ய வேண்டும் என்ற குணத்தை கொண்ட பாலா, மனித உருவத்தில் உள்ள கடவுள் எனவும், விஜயகாந்தின் மனம் ஒத்த வகையில் செயல்படுவதால் அடுத்த விஜயகாந்த் இவர்தான் எனவும் பலர் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "எனக்கு திருமணம் முடிந்து விட்டது" நடிகை அஞ்சலியின் பரபரப்பு பேச்சு.!?