திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓடோடி உதவியவருக்கு இந்த நிலையா?: KPY பாலாவின் 2 விரல்கள் முறிந்தது..!
சின்னத்திரையில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்களிடையே பிரபலமடைந்தவர் பாலா. இவர் தனது நகைச்சுவை பாணியால் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தனது தொண்டு உள்ளம் கொண்ட மனதாலும் அடையாளம் பெற்று வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவசர ஊர்தி வாங்கி மலைகிராமத்திற்கு அவர் பரிசு அளித்தார். இதனை தொடர்ந்து சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு தன்னிடமிருந்த ரூ.2 லட்சம் ரூபாயை, ஒரு குடும்பத்திற்கு ₹ 1000 என பிரித்து வழங்கி பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
இந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கை விரல்கள் முறிந்ததாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "மனம் நிறைந்தது, விரல் உடைந்தது. நன்றி" எனக் கூறியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் விரைவில் அவர் உடல்நலம் பெற வேண்டுமென வேண்டுகோள் வைத்துள்ளனர்.