திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
KPY பாலா வழங்கிய ஆம்புலன்ஸை மேள தாளத்துடன் வரவேற்ற பழங்குடியின மக்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமான நபர் தான் பாலா. இவர் குக் வித் கோமாளி யில் கோமாளியாக களமிறங்கி பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார்.
சமையல் நிகழ்ச்சி என்பதை மறக்கும் அளவிற்கு காமெடி நிகழ்ச்சியாகவே நாம் இதை பார்க்க தொடங்கி விட்டோம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பாலாவின் காமெடியும் புகழின் காமெடியும் இந்த நிகழ்ச்சிக்கு தூண்களாகவே இருந்துள்ளது.
இந்த நிலையில் குக் வித் கோமாளியில் கிடைக்கப்படும் பரிசு பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் மனம் கொண்டவராகவே இருந்தார் பாலா. இதற்காகவே அவர் நிகழ்ச்சியில் ஜெயித்து பரிசுகளை வாங்க வேண்டும் என்று முழு ஆர்வத்துடன் பங்கேற்றார்.
இந்த நிலையில் தற்போது பாலா ஆம்புலன்ஸ் ஒன்றை பழங்குடியின மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளம் முழுவதும் பாராட்டுக்கு உள்ளானது. இந்த நிலையில் காமெடி நடிகர் பாலா வழங்கிய ஆம்புலன்ஸ்ஸை மேளதாளத்துடன் வரவேற்றுள்ளனர் பழங்குடியின மக்கள்.
காமெடி நடிகர் பாலா வழங்கிய ஆம்புலன்ஸை மேள தாளத்துடன் வரவேற்ற பழங்குடியினர்#Ambulance | #Bala | #VIjayTV | #MedicalCare | #Erode | #TamilNadu | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/efywwyl44T
— News7 Tamil (@news7tamil) August 27, 2023