திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
KPY பாலாவின் உருவத்தை ஹார்ட் பிஸ்கட்டால் வரைந்த ஓவியர்; இன்ப அதிர்ச்சி கொடுத்த பாலா.!
சின்னத்திரை மூலமாக அங்கீகாரம் பெற்று, தமிழக மக்களுக்கு தற்போது பல்வேறு உதவிகளை செய்து வரும் நபராக இருப்பவர் கேபிஒய் பாலா. இவர் அவசர ஊர்தி வாங்கி கொடுப்பது, சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.ஆயிரம் என ரூ.3 இலட்சம் வரை வழங்கியது என தொடர்ந்து நற்பணிகள் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவர், ஹார்ட் பிஸ்கட்டால் கேபிஒய் பாலாவின் புகைப்படத்தை வரைந்து, அவருக்கு கலியுக கர்ணன் என்ற பட்டத்தையும் சூட்டினார்.
சமூக வலைத்தளங்களில் வைரலான விடியோவை பார்த்த பாலா, ஓவிய ஆசிரியருக்கு தனது நன்றியினை தெரிவித்து வீடியோ வெளியிட்டு ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும், தனது நன்றியையும் பதிவு செய்தார்.