அச்சோ.. சிகிச்சைக்குகூட பணமின்றி தவிக்கும் பழம்பெரும் நடிகை..! உதவ யாருமில்லையா?..! இவங்களுக்கா இப்படி ஒரு நிலை?.!!



Legendary actress jayakumari had kidney failure and had no money

பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜெய்குமாரி (வயது 72). இவர் கடந்த 1966-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த "நாடோடி" திரைப்படத்தில் வில்லன் நடிகர் நம்பியாருக்கு கண்தெரியாத தங்கையாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் தற்போது சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், ஒரு மாதகாலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு நங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அத்துடன் ஜெயக்குமாரிக்கு இரண்டு சிறுநீரகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிந்தவுடன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற டாக்டர் அறிவுறுத்தியுள்ளார். 

ஆனால் சிகிச்சைக்கு தேவையான பணம் ஜெய்குமாரியிடம் இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேராமல் சமாளித்து வந்துள்ளார். இந்த நிலையில் வயிற்று வலி அதிகமானதால் சிகிச்சைக்கு நேற்று முன்தினம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Legendary Actress

தற்போது அவருக்கு வலி நிவாரண மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும், திங்கட்கிழமை ஸ்கேன் முடிவு தெரியவரும் என்றும், அதன் பின்னே நோய் தாக்கத்திற்கு ஏற்ப மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருந்தும் இதுவரையிலும் மருத்துவமனையில் வந்து யாரும் இவரை கவனிக்கவில்லை என்பதுதான் பெரும் கொடுமை. 

என்னை எனது மகன் நன்கு கவனித்த போதிலும், குடும்ப சூழல் காரணமாக தனியாக வசித்து வருகிறேன். அன்றாட செலவுகள் கழிந்தாலும், இதுபோக தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு போதுமான பணமில்லை. எனக்கு கருணாநிதியை நன்றாகவே தெரியும். அவரது மகன் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். 

ஒருவேளை அவர் எனக்கு உயர்தரசிகிச்சை அளிக்க உதவி செய்தால் நன்றாக இருக்கும். அதையும் அவரிடம் கேட்க எனக்கு மனம் வரவில்லை. அவரின் கருணை பார்வை என்மேல் பட்டால் போதும் என்று ஜெயக்குமாரி கூறியது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.