மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லியோ திரைப்படம் வெற்றியடைய வேண்டி, திருப்பதிக்கு சென்று மொட்டையடித்த ரசிகர்.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், நடிகர்கள் இளையதளபதி விஜய், திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் லியோ.
இத்திரைப்படம் வரும் அக்.19 (நாளை மறுநாள்) உலகளவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
சர்வதேச அளவிலும் லியோ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பு நிறுவனம் போராடி வருகிறது. அரசோ திட்டவட்டமாக காலை 9 மணிக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது.
இந்நிலையில், யூடியூபர் ஒருவரிடம் பின்தொடர்பாளர்கள் லியோ திரைப்படம் வெற்றியடைய திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று மொட்டையடிக்கச்சொல்லி கமெண்ட் செய்ய, யூடியூபர் நேரடியாக கோவிலுக்கு சென்று பின்தொடர்பாளர் சொன்னபடி மொட்டையடித்துக்கொண்டார்.