மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தயாரிப்பாளராக அவதாரமெடுத்த லோகேஷ் கனகராஜ்.! முதல் படத்தின் ஹீரோ யார் தெரியுமா??
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு உச்சத்தைத் தொட்ட இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி,மாஸ்டர்,விக்ரம், லியோ என பல்வேறு வெற்றி படங்களை இயக்கியவர். lCU என்ற வட்டத்திற்குள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை ஒன்றிணைத்து உலக அளவிலான படைப்புகளை படைத்து வருகிறார்.
இவர் படங்களை இயக்குவது மட்டுமின்றி தனது அடுத்த முயற்சியாக தயாரிப்பதிலும் தனது கால்தடத்தை பதித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனராஜ் ஜி ஸ்குயட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், முதற்கட்டமாக தனது உதவி இயக்குனர்கள் மற்றும் நண்பர்களின் படங்களை தயாரிக்க உள்ளதாகவும், தனது படத்திற்கு கொடுக்கும் ஆதரவை அவர்களின் படத்திற்கும் கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்களிடம் விரும்பி கேட்டுக்கொண்டார்.
And here’s our first presentation, with @Vijay_B_Kumar and Gang!!
— GSquad (@GSquadOffl) November 28, 2023
First Look out on 29th November at 6 PM 👊🏻@Dir_Lokesh @reelgood_adi @Abbas_A_Rahmath @reel_good_films #GovindVasantha @editorKripa @leonbrittodp #kannanganpat @renganaath_R @VickyStunt_dir #Ezhumalai… pic.twitter.com/Yuofg4xGOf
இந்நிலையில் அவரது தயாரிப்பில் வெளியாகும் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஹீரோவாக உறியடி படத்தின் தயாரிப்பாளரும் மற்றும் நடிகருமான விஜயகுமார் நடித்துள்ளார். நாளை மாலை 6 மணியளவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.