சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
"வருகிறான் மாமன்னன்..." மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய முக்கிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கும் திரைப்படம் மாமன்னன். இந்தத் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து விரைவில் வெளியாகும் வினை எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாஸில் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதுவரை காமெடி நடிகராகவே நடித்து வந்த வடிவேலுக்கு மிகவும் அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவரது கதாபாத்திரம் நீண்ட நாட்களாக மக்கள் மனதில் நின்று பேசும் வகையில் இருக்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. வடிவேலு குரலில் வெளியான ஒப்பாரி பாடல் ஒன்றும் ஏ.ஆர் ரகுமான் குரலில் வெளியான ஜிகு ஜிகு ரயிலு என்ற பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு ஆகியவற்றிற்கான தேதி மற்றும் இடத்தையும் பட குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.