வந்தான், வீடியோ எடுத்தான், நெட்ல விட்டுட்டான்... லீக்கான மாநாடு.. ஷாக்கில் படக்குழு.!



Maanaadu Movie Illegaly Released on Telegram Private Website

புதிய திரைப்படங்கள் இணையங்களில் வெளியாகுவது என்பது தொடர்கதையாகியுள்ளது. குறைந்த அளவிலான பட்ஜெட் படம் முதல், பெரும் பட்ஜெட் படம் வரை பாரபட்சமின்றி திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டு இணையங்களில் பதிவு செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் தொழில்நுட்ப ரீதியாக மேற்கொண்டாலும், அதனால் எந்த பலனும் இல்லை. 

நடிகர் சிம்பு பல சர்ச்சைகளை சந்தித்து வந்த நிலையில், ஈஸ்வரன் திரைப்படத்தில் அவரின் மீதான சர்ச்சை பார்வை திரும்பியது. அவரது வாழ்க்கையில் இனி முன்னேற்றம் என்று அறியப்பட்ட நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்து சர்ச்சையை சந்தித்து நடித்த திரைப்படம் மாநாடு. இந்த படத்திற்கு யுவன் இசையமைத்து இருக்கிறார்.

Maanaadu

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவான படம், ரூ.50 கோடி பட்ஜெட் அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவேண்டிய திரைப்படம் இறுதியாக நவ.25 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் தேதியும் இறுதி நேரத்தில் தள்ளி செல்கிறது என படத்தயாரிப்பாளர் தெரிவித்த நிலையில், இரவு வேளையில் படத்தின் ரிலீஸ் உறுதியானது.

இந்நிலையில், நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. முதற்காட்சி திரைப்படம் ஒளிபரப்பான சிலமணிநேரத்திற்கு உள்ளாகவே இணையத்தில் படம் வெளியாகியுள்ளது. இதனால் திரைபடக்குழு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.