Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
அவரை பார்த்தவுடனேயே ஐ லவ் யூ சொல்லிருவேன்.! ஷாக் கொடுத்து பிரபல நடிகை கூறியது யாரை தெரியுமா?
தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷுடன் ஜோடி சேர்ந்து எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.
ஆனால் இதுவரை அந்த படம் வெளியாகாத நிலையில், அதனை தொடர்ந்து அவர் பேட்ட, பூமராங், வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும் என கேட்டதற்கு, எனக்கு தல தோனியை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் சிறிதும் யோசிக்காமல் உடனே ஐ லவ் யூ கூறி விடுவேன் என்று கூறியுள்ளார்.