#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெள்ளை மனசுக்காரர் என நிரூபித்துக் காட்டிய கேப்டன்.!
திரைத்துறைக்கு வருவதற்கு நிறமும், அழகும் தேவை என்ற அந்த கட்டமைப்பை உடைத்து காட்டியவர் தான் ரஜினிகாந்த். மேலும், கருப்புதான் அழகு என்று சொல்லுமளவிற்கு எல்லோரின் மனதிலும் நிலைத்து நின்றார். இவரை பார்த்த பிறகு வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு நிறம் மட்டும் தேவையில்லை என்று பலர் புரிந்து கொண்டனர். அந்த வகையில் இவரை பார்த்து நடிப்பதற்காக அந்த இந்த 5 நடிகர்கள் வெற்றி பெற்று காட்டியிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பாக தற்போது நாம் காணலாம்.
விஜய் சேதுபதி : அழகும், இளமையான தோற்றமும் இருந்தால் மட்டுமே சினிமா துறையில் வெற்றி பெற முடியும் என்பதை கடந்து திறமை இருந்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு ரசிகர்களின் மனதில் நின்று விட்டார். இவருடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்தது. தற்போது இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அந்த விதத்தில் நிறம் ஒரு பிரச்சனையே இல்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.
முரளி : தற்போது பெரிய, பெரிய நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்களை எப்போதுமே நம்மால் மறந்து விட முடியாது. அந்தளவிற்கு இன்றளவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகர் முரளி. வெள்ளை நிறத்தில் இருக்கின்ற நடிகர்கள் தான் வெற்றி பெற முடியும் என்ற அந்த பிம்பத்தை உடைத்து, ரசிகர்களாலும் பொதுமக்களாலும் ஏற்றுக்கொண்ட ஒரு கதாநாயகனாக வலம் வந்திருக்கிறார் முரளி.
பார்த்திபன் : இவருடைய பேச்சு புரியாத புதிராக காணப்பட்டாலும், இவர் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கட்டி போடும் வல்லமை கொண்டவர். சண்டை, காமெடி சென்டிமென்ட் என்று எல்லா பரிமாணங்களிலும் நடித்த இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான இடமிருக்கிறது இவர் கருப்பாக இருந்தாலும் இவருடைய நடிப்பு சாதனை படைக்கும் அளவுக்கு இருந்திருக்கிறது.
விஜயகாந்த் : இவருடைய நிறம் தான் கருப்பு ஆனால், மனம் வெள்ளை என்று நிரூபித்து காட்டியவர் நடிகர் விஜயகாந்த். இவர் திரைத்துறையில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். மேலும் இவருடைய தன்னம்பிக்கை மிக்க நடிப்பும் நேர்மையான பேச்சும் எல்லோரையும் ஊக்கப்படுத்தி இருக்கின்றது. இதன் காரணமாகவே, தமிழ் சினிமாவில் கேப்டன் என தனக்கென்று தனி முத்திரை பதித்து கோடிக்கணக்கான ரசிகர்களை இவர் அன்பால் கட்டி போட்டிருக்கிறார்.
லாரன்ஸ்: இவர் திரைத்துறைக்கு வந்த தொடக்க காலகட்டத்தில் பல்வேறு துன்பங்களை சந்தித்து இருந்தாலும்தன்னுடைய மானசீக குருவாக ரஜினியை ஏற்றுக்கொண்டு அவரைப் போல் நாமும் வெற்றி பெற வேண்டும் என்று மனதளவில் முழு நம்பிக்கையோடு தோல்விகளை தூக்கி எறிந்து வெற்றி பாதையில் அடி எடுத்து வைத்தவர் இதன் காரணமாக தற்போது இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக இருக்கிறார்.