மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மாஸ்... அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்.! மாமன்னன் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் பற்றி தெரிவித்த படக்குழு.!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மாரி செல்வராஜ். திருநெல்வேலியைச் சார்ந்த இவர் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற திரைப்படத்தை எடுத்தார்.
கர்ணன் திரைப்படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று தமிழ் சினிமாவில் தனக்கென அசைக்க முடியாத ஒரு இடத்தை உருவாக்கினார். தற்போது இவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் இந்த திரைப்படத்தில் அவருடன் ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி அடைந்திருக்கின்றன. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டிற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Audio live concert on June 1st. Stay tuned! #MAAMANNAN @arrahman @Udhaystalin @mari_selvaraj @RedGiantMovies_ #Vadivelu #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @teamaimpr pic.twitter.com/nj7WoMbm2w
— Keerthy Suresh (@KeerthyOfficial) May 30, 2023
அந்த அறிவிப்பின்படி மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற ஜூன் 1ஆம் தேதி நேரு உள்விளையாட்டறங்கில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெறும் என படக் குழு அறிவித்திருக்கிறது. மேலும் அந்த விழாவின்போது படத்திற்கான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.