96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அதெல்லாம் உண்மையில்லை! தீயாய் பரவி வந்த தகவல்! ஒத்த பதிவால் முற்றுப்புள்ளி வைத்த நடிகர் மனோஜ்!
தமிழ் சினிமாவில் 1978ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். சைக்கோ த்ரில்லர் படமான இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் படைத்தது.
இந்நிலையில் சமீபத்தில் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும், அப்படத்தை பாரதிராஜா தயாரிப்பில் மனோஜ் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா பரிசீலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து மனோஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமீபகாலமாக சிகப்பு ரோஜாக்கள் 2 குறித்த பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால் அது உண்மை இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அதுகுறித்து நானும் எனது அப்பா பாரதிராஜாவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடுவோம். உங்களது அக்கறைக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.