தளபதி 65 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்! வெளியான அசத்தலான அப்டேட்!



master-johny-join-in-thalapathy-65-update

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தளபதியின் 65வது படமான இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி 65 படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. அண்மையில் கூட தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்தது.

Johny

அதனைத் தொடர்ந்து நேற்று தளபதி 65 படத்தில் மாஸ்டர் ஜானி நடனப்பயிற்சிக்காக இணைந்துள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சியுடன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தளபதி 65 படத்தில் இணைந்தது பெருமிதமாக உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்பை மதிப்பு நிறைந்ததாக மாற்றுவேன். பாடல் ஒன்றுக்கான ரிகர்சல் ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்க உள்ளது. படப்பிடிப்பு மே 3 முதல் 9 ஆம் தேதி வரை நடக்க உள்ளது எனஅவர் தெரிவித்துள்ளார்.