சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
ரஜினிக்காக ரிஸ்க் எடுக்கும் நடிகை மீனா..! ஆச்சரியத்தில் அண்ணாத்த படக்குழு.! என்ன விஷயம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை மீனா. ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
இந்நிலையில், இயக்குனர் சிவா இயக்கத்தில், ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தில் மீனா நடித்துவருகிறார். படத்தில், ரஜினிக்கு ஜோடியாக, அவரது மனைவியாக மீனா நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக நடிகை மீனா தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவருகிறாராம்.
ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதால், ரஜினிக்கு ஈடான எடையுடன் காட்சியளிக்கவேண்டும் என்பதற்காக, இரவு பகலாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துவருகிறாராம் மீனா. மீனாவின் உடல் எடை குறைந்த சில புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.