96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!
நாடோடிகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கே.கே.பி கோபாலகிருஷ்ணன் நெஞ்சுவலி காரணமாக இன்று அவரது சொந்த ஊரில் மறந்தமடைந்துள்ளார்.
இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் படத்தில் நாயகி அனன்யாவின் தந்தையாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர்தான் இந்த கே.கே.பி கோபாலகிருஷ்ணன். அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது.
நாடோடிகள் படத்தை அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், வேலை இல்லாத பட்டதாரி போன்ற படங்களிலும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான நாடோடிகள் - 2 படத்திலும் கே.கே.பி கோபாலகிருஷ்ணன் நடித்திருந்தார். இந்நிலையில், உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம், குப்பாகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நெஞ்சு வலி காரணமாக இன்று உயிர் இழந்துள்ளார் கே.கே.பி கோபாலகிருஷ்ணன். இவரது மறைவுக்கு சினிமா துறையினர் பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்துவருகின்றனர்.
— P.samuthirakani (@thondankani) February 5, 2020