#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"குடும்ப குத்து விளக்காக மாறிய நயன்தாரா.. கணவருடன் செம ரொமான்ஸ் போல" ரசிகர்கள் கமெண்ட்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் தனது பெயரை நிலைநாட்டி இருக்கிறார்.
தனது நடிப்பு திறமையின் மூலமும், அழகினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் எனும் பெயர் பெற்றுள்ளார். இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடிக்கும் போது படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் வாடகை தாய்முறை மூலம் இரு ஆண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார் நயன்தாரா. மேலும் சினிமாவில் மட்டுமல்ல பல பிசினஸ்களையும் செய்து பிஸியாக இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரொமான்ஸ் செய்யும்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.