மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. சென்னையில் இந்த பிரபல தியேட்டரை நயன்தாரா வாங்கிட்டாரா?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில், பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகிறார். நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை நயன்தாரா வட சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அகஸ்தியா தியேட்டரை விலைக்கு வாங்கிவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. 1967-ல் திறக்கப்பட்ட இந்த தியேட்டரில் பாமா விஜயம் முதல் திரைப்படமாக திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிடப்பட்ட இந்த பழமையான தியேட்டர் 2020 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா அகஸ்தியா தியேட்டரை விலைக்கு வாங்கி இருப்பதாகவும், அதனை இடித்துவிட்டு அந்த இடத்தில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கட்டப்போவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் தற்போது இது உண்மையில்லை, வதந்தி என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ள அகஸ்தியா திரையரங்க நிர்வாகம், அகஸ்தியா திரையரங்கம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது. அதனை யாருக்கும் விற்க முடியாது. அப்படி இருக்கையில் நயன்தாரா இந்த இடத்தை வாங்கிவிட்டார் என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துள்ளது.