திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
படிப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடிக்கும் நயன்தாரா? கலக்கத்தில் படக்குழு.!
தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. தற்போது இவர் மண்ணாங்கட்டி என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் இந்த படத்தில் நயன்தாராவுடன் தேவதர்ஷினி, நரேந்திர பிரசாத் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் திரைப்படத்தை பிளாக் ஷீப் யூடியூப் சேனல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் டியூட் விக்கி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொடைக்கானல் மலைப்பகுதியில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், நயன்தாரா தற்போது கொடைக்கானல் வர முடியாது என கூறியதால் சென்னையில் கொடைக்கானல் போன்ற செட் போட்டு அவருக்காக கடைப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.