96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சர்ச்சையை கிளப்பியுள்ள நடிகை ஹன்சிகாவின் புகைப்படம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி?
யு.ஆர். ஜமீல் இயக்கும் ’மஹா’ என்ற படத்தில், நடிகை ஹன்சிகா நடிக்கும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதில் ஒரு போஸ்டரில், காவி உடையில் காணப்படும் ஹன்சிகா, காசி நகரின் பின்னணியில் நாற்காலியில் அமர்ந்து புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த போஸ்டர் பெண் துறவிகளையும் இந்து மத உணர்வுகளையும்,கொச்சைப்படுத்தும் விதத்தில் இருப்பதாக கூறி இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் வி.ஜி. நாராயணன் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம், புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மீது ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.ஜி. நாராயணன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதி இளந்தரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த அவர்
வி.ஜி. நாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்கக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார். விரைவில் காவல் ஆணையர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.