மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெறித்தனமான அப்டேட்... தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் அப்டேட் வெளியிட்ட கேப்டன் மில்லர் படக்குழு.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். தனது தத்ரூபமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற இவர் தற்போது தனது 50 வது படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார்.
கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் வெளியாயின. இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. எத்தனை தொடர்ந்து இந்த வருடம் வெளியான வார்த்தை திரைப்படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரனுடன் இணைந்தார் தனுஷ். கேப்டன் மில்லர் என்று பெயரிடப்பட்ட இந்த திரைப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலக் கட்டத்தினை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#CaptainMilIer MASS new poster.
— Movie Hubway (@moviehubway) July 26, 2023
All set for Teaser from 28 July. pic.twitter.com/zVOh4zEsVX
இந்நிலையில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு திரைப்படத்திற்கான டீசர் வெளியிடப்படும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பின்படி நாளை இரவு 12 மணிக்கு கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.