Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
மிக்ஜாம் புயல் விஜய் மக்கள் இயக்கம் எடுத்த அதிரடி முடிவு.! மகிழ்ச்சியில் சென்னைவாசிகள்.!.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு அதிகாரப்பூர்வமான செய்தி குறிப்பில், சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக, பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழைக்கால தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. அதனை தடுக்கும் விதத்தில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வரும் 14 -12-2023 அன்று காலை 8.05 முதல், மதியம் 1 மணி வரையில் இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட 25 பகுதிகளில் செவிலியர்கள் மற்றும் பல்துறை மருத்துவர்கள் ஆகியோர் துணையுடன், இந்த மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. இதன் மூலமாக முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு மாத்திரைகள் மற்றும் தடுப்பு மருந்துகள் மேலும் மருத்துவ ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்படும். ஆகவே அனைத்து தரப்பு மக்களும் இந்த முகாமில் பங்கு பெற்றுக் கொண்டு பயன்பெற வேண்டும் என விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கூறப்பட்டுள்ளது.
தளபதி விஜய் ஏற்கனவே தான் அரசியலுக்கு வர போவதை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டார். சமீபத்தில் நடைபெற்ற லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவிலும் மறைமுக பேச்சின் மூலமாக அதனை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மக்கள் இயக்கத்தின் இந்த செயல், ரசிகர்களிடையே பாராட்டையும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. தளபதி விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அடுத்த முதல்வர் நீங்கதான் தளபதி என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.