மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. அந்த முன்னணி நடிகையுடன் காதலில் விழுந்தாரா நடிகர் சித்தார்த்! தீயாய் பரவும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து அவர் 180, உதயம் என்.எச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், அருவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது சமூக அநீதிகளுக்கு எதிராகவும், அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக கூறியும் சர்ச்சையில் சிக்குவார். இந்த நிலையில் அண்மைக்காலமாக நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதல் வலையில் சிக்கியதாக தகவல்கள் பரவி வருகிறது.
அதாவது இருவருக்கும் தெலுங்கில் 'மஹாசமுத்திரம்' என்ற படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மும்பையில் சலூன் ஒன்றில் இருந்து வெளிவந்து இருவரும் ஒரே காரில் செல்லும் வீடியோவை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து அவர்களது தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியிடவில்லை.