மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. இம்புட்டா.! பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?? ஷாக்கான ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரை 91 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக சென்று இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்ன பாரதி, ஐஷூ, கானா பாலா, பிராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம் ஆகியோர் வெளியேறியுள்ளனர். போட்டியாளரான பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.
மேலும் கடந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற்றது. அதில் ரவீனா மற்றும் நிக்சன் ஆகியோர் வெளியேறினர். போட்டியாளரான நிக்சன் சில ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார். இசைக் கலைஞராக பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். மேலும் ஐஷூவுடன் நெருங்கி பழகி காதல் ஜோடியாக வலம் வந்தார்.
இந்நிலையில் அவர் குறைந்த வாக்குகளை பெற்று கடந்த வாரம் வெளியேறினார். சுமார் 91 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிக்சன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது நிக்சன் ஒரு எபிசோடுக்கு ரூ.13 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளாராம். அவ்வாறு அவர் 90 எபிசோடுகளுக்கு ரூ.11,70,000 சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.