மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க போகிறாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்.. வைரலாகும் புகைப்படம்..
விஜய் டிவியின் "ஜோடி நம்பர் 1" நிகழ்ச்சியில் பின்னணி நடனக் கலைஞராக நடனமாடியவர் குமரன் தங்கராஜன். இதையடுத்து "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா", "மாநாட மயிலாட" போன்ற நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடியுள்ளார்.
இதையடுத்து 2015ம் ஆண்டு விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த "இது என்ன மாயம்" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான "மாப்பிள்ளை" தொடரில் நடிகராக சின்னத்திரையில் அறிமுகமானார்.
தொடர்ந்து ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய பிரபல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். மாயத்தோட்டா, வதந்தி போன்ற இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார். இதில் வதந்தி தொடரில் நடிகை லைலாவுடன் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதில் நடிகை லைலாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக குமரன் தங்கராஜன், லைலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு சில ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனும் விஜய் திரைப்படத்தில் நடிக்கப் போகிறாரா என்று கேட்டு வருகின்றனர்.