மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Pathu Thala Trailer: அட்டகாசமாக வெளியானது பத்து தல படத்தின் டிரைலர்.. தெறிக்கவிடும் சிம்பு.. அனல்பறக்கும் வீடியோ.!
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பத்துதல படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
கே.இ ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிம்புவின் நடிப்பில், என். கிருஷ்ணா இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் பத்து தல. இந்த படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர், அணு சித்ரா, டீஜே அருணாசலம், கலையரசன் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
கன்னடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மப்டி திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கதைக்களத்தை மாற்றி படம் எடுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கே.ஜி.எப் போல கடத்தல், ஆக்சன் கொண்ட கலவை படமாக பத்து தல தயாராகியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு தொடங்கிய பத்து தல திரைப்படத்தின் பணிகள் 3 ஆண்டுகளை கடந்து ரிலீசுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இன்று படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, இரவு 10 மணியளவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.