திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் கைது.! என்ன நடந்தது? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
தமிழ் திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவராக வலம் வருபவர் வேல்முருகன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இவர் மெட்ரோ பணி உதவி மேலாளரை தாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயில் பணிகள்
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைப்பெற்று வருவதால், இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அவ்வாறு சில தினங்களுக்கு முன் இரவு 11 மணியளவில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை, வேம்புலி அம்மன் கோவில் சிக்னல் அருகே பேரிகாட் வைக்கப்பட்டு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: மது போதையில் தகராறு செய்த போதை ஆசாமி.. தட்டிக்கேட்ட காவலருக்கு நேர்ந்த கொடூரம்!
உதவி மேலாளருடன் வாக்குவாதம்
அப்பொழுது அந்த வழியாக காரில் வந்த பின்னணி பாடகர் வேல்முருகன் பேரிகாடை நகர்த்தி வைத்துவிட்டு செல்ல முயற்சி செய்துள்ளார்.அதனை கண்ட மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளரான வடிவேல் என்பவர் இவ்வழியில் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் வேல் முருகனுக்கும், உதவி மேலாளருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கைது செய்யபட்ட வேல்முருகன்
மேலும் வேல்முருகன் அவரை சாரமரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். தொடர்ந்து உதவி மேலாளர் கொடுத்த புகாரின் பெயரில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்
இதையும் படிங்க: தகாத உறவை முறித்ததால் காதலியின் குழந்தைகளை கொன்ற கள்ளக்காதலன்!