#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காவல்துறை அதிகாரி சொன்ன ஒத்த வார்த்தை!. தெறி தெறித்து ஓடிவந்த பிரபல நடிகர்!.
கன்னட பிரபலமான நடிகர் துனியா விஜய். இவர் பாடிபில்டராக இருந்தவர். இந்நிலையில், பெங்களூருவில் நடந்த ஆணழகன் போட்டிக்கு நேற்று முன்தினம், துனியா விஜய் தனது நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார்.
அங்கு மாருதி கவுடா எனும் உடற்பயிற்சியாளரிடம், தான் முன்பு பயிற்சி மேற்கொண்டு வந்த கிட்டி என்ற உடற்பயிற்சியாளர் பற்றி துனியா விஜய் விசாரித்துள்ளார். அப்போது அவரை பற்றி நடிகர் துனியா விஜய் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்பு மோதல் ஏற்பட்டு, மாருதி கவுடாவை தனது காரில் கடத்திச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து விஜய் தாக்கியுள்ளார்.
இதனை அறிந்த பயிற்சியாளர் கிட்டி இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, துனியா விஜய்க்கு போன் செய்த காவல்துறை அதிகாரி ரவிசங்கர், இன்னும் ஒரு மணி நேரத்தில் மாருதி கவுடாவோடு நீங்கள் இங்கு வந்து நிற்க வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.
இதனையடுத்து துனியா விஜய் ஒரு மணி நேரத்துக்குள் காவல் நிலையம் வந்தடைந்தார். அங்கு கிட்டி விஜய்யிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு காவல் நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நடிகர் துனியா விஜய் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த மாருதி கவுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.