மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உயிரை பறிக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா இந்த பிரபல தமிழ் காமெடிநடிகர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றி தற்போது அதிதீவிரமாக பரவி வருகிறது கொரனோ வைரஸ். இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 360க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 22000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரைப் பறிக்கும் இந்த கொடிய கொரோனா வைரஸால் பல நாடுகளும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ்சினிமாவில் 180–க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் போண்டாமணி. இவர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாஸ் படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் போண்டாமணி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிவார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தது. இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இதுகுறித்து நடிகர் போண்டாமணி விளக்கமளித்துள்ளார். அவர் நான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருவதாக பரவிவரும் தகவல் முற்றிலும் வதந்தி. நான் நலமாக உள்ளேன். படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக்கொண்டு இருக்கிறேன். தயவுசெய்து யாரும் என்னை பற்றி பரவிவரும் தவறான செய்தியை நம்ப வேண்டாம் என போண்டாமணி கூறியுள்ளார்