மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. பொன்னியின் செல்வன் கதாபாரத்தில் நடித்த நடிகர்களுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. வாயை பிளக்கும் ரசிகர்கள்.!
பான் இந்தியா படமாக தயாராகிவரும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள நிலையில், இப்படத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஜெயம் ரவி மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. அதில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த விக்ரமிற்கு 12 கோடி, நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு 10 கோடி, அருள்மொழிதேவன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம்ரவிக்கு 8 கோடி, வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக்கு 5 கோடி சம்பளம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷாவிற்கு 2.5 கோடி, பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு 1.5 கோடி என்ற சம்பளவிவரமும் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பள விபரம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், படக்குழு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே அது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.