மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இல்லத்தரசிகளே தயாரா?.. சோழராணியாக நீங்களும் ஜொலிக்கலாம்.. ஜவுளிக்கடைகளில் அமோகமாக விற்பனையாகும் பொன்னியின் செல்வன் சேலைகள்..!
கல்கியின் மிகவும் புகழ்பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் நிலையில், படத்தின் முதல்பாகம் வரும் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், ஜெயராமன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட முன்னணி பிரபலங்களும் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது.
இப்படத்தின் பிரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெண்களை கவரும் விதமாக தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டுசேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.
பல வண்ணங்களில் இப்புடவைகள் தயாரிக்கப்படும் நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் உருவங்கள் மற்றும் போர்வாள்கள் சேலை முழுவதும் நிறைந்து வண்ணமயமாக காட்சியளிக்கிறது. இது பெண்கள் பலரையும் கவர்ந்ததால் இந்த சேலைகளை வாங்குவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.