#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் மறுபடியும் வந்துட்டேன்..! வாவ் தளபதி 65ல் விஜய்க்கு ஜோடியாகபோவது இவங்களா! செம சர்பிரைசில் ரசிகர்கள்!
தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தளபதியின் 65வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தளபதி 65 படம் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோயினாக நடிக்கபோவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது.
SUPER DUPER EXCITED to be onboard this grand film with the fantastic @actorvijay ☺️ Can’t wait to start shooting @Nelsondilpkumar @sunpictures @anirudhofficial 😊 Tamil cinema....here I come....❤️😃 #Thalapathy65 #PoojaHegdeInThalapathy65 pic.twitter.com/m7azBUvMkx
— Pooja Hegde (@hegdepooja) March 24, 2021
இந்த நிலையில் தற்போது அதனை படக்குழு உறுதிசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இதுகுறித்து மிகவும் உற்சாகத்துடன் பூஜா ஹெக்டே தனது டுவிட்டர் பக்கத்தில், இது போன்ற பிரம்மாண்டமான படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. படப்பிடிப்பு துவங்கும் வரை காத்திருக்க முடியவில்லை., தமிழ் சினிமா நான் வருகிறேன் என கூறியுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே இதற்கு முன்பு மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.