அம்மாடியோவ்.. வேற லெவல்தான்.! நடிகை பூர்ணாவுக்கு கணவர் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்.! என்னனு பார்த்தீங்களா!!



Poorna got costly gifr from her husband

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. தொடர்ந்து அவர் அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடிவீரன், கந்த கோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

பூர்ணா தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் இறுதியாக படம் பேசும், பிசாசு 2, அம்மாயி போன்ற படங்களில் நடித்துள்ளார். அண்மையில் அவர் துபாய் தொழிலதிபரான ஷனித் அசிப் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

poorna

தற்போது அவர் கணவருடன் துபாயில் குடியேறியுள்ளார். இந்நிலையில் பூர்ணாவுக்கு அவரது கணவர் துபாயில் பெரிய சொகுசு வீடு ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 1,700 கிராம் தங்க-வைர நகைகளையும் அவர் பரிசாக வழங்கியுள்ளாராம்.