தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
90 களில் சாக்லேட்பாயாக வலம் வந்த நடிகர் அப்பாஸ்க்கு என்ன ஆச்சு... வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!
90 களில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் தமிழில் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், படையப்பா, பூச்சூடவா, திருட்டு பயலே போன்ற சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார்.
அப்பாஸ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவி ஏராம் அலி, மகள் எமிரா மற்றும் மகன் அய்மான் ஆகியோருடன் நியூசிலாந்தில் குடியேறி நிலையில் அங்கு சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவரின் வலது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவேன் என்றும் கூறியிருக்கிறார் அப்பாஸ். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.