மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியை தவிக்கவிட்டு சென்ற பவர்ஸ்டார் சீனிவாசன்: காவல்நிலையத்தில் கதறும் பவர்ஸ்டார் மனைவி!.
நடிகர் சந்தானம் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நடிகர் பவர் ஸ்டார் மிகவும் பிரபலமடைந்தவர்.
பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். லத்திகா, கண்ணா லட்டு திங்க ஆசையா, ஐ , கோலி சோடா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவர் மீது மோசடி புகார்கள் உள்ளன. இந்நிலையில் நண்பரை பார்க்க செல்வதாக கூறிய பவர்ஸ்டார் வீடு திரும்பவில்லை எனவும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
பவர் ஸ்டாரின் மனைவி ஜூலி கொடுத்த புகாரின் பேரில், மோசடி புகாரில் சிக்கியுள்ள அவரை யாரேனும் கடத்தி சென்றுவிட்டனரா இல்லை அவர் தலைமறைவாக இருக்கிறாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.