நடிகர் விஜயின் அரசியல் வருகையை குறித்து சர்ச்சையான கருத்தை பதிவிட்ட பிரகாஷ்ராஜ்..



Prakash raj openup about vijay political entry

நடிகராகவும், இயக்குனர், தயாரிப்பாளராகவும் பன்முகத்தன்மை கொண்டவர் பிரகாஷ் ராஜ். தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு வரும் இவர், பி ஜே பி அரசின் செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது விமர்சித்து வருகிறார்.

vijay

சமீபத்தில், "வணக்கம் தமிழ்நாடு" நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் குறித்து கருத்து கூறினார். ஜெய் பீம் போன்ற படத்திற்கு விருது கொடுக்கப்படாததில் கண்டிப்பாக உள்நோக்கம் உள்ளது.

எந்தப் படத்தையும் தடை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. கருத்து சுதந்திரம் அனைவர்க்கும் பொதுவானது. ஆனால் அதற்கு ஆதரவு தருவதில் தான் எனக்கு பிரச்சனை. ஒரு கருத்துக்கு ஆதரவளிக்கும்போது உங்கள் எண்ணம் அதில் தெரியும்.

vijay

விஜய் அரசியலுக்கு வந்தாலும் நான் அவரிடம் கேள்வி கேட்பேன். நீ எதை எதிர்க்கிறாய்?அதற்கு மாற்றாக எதை கொண்டு வரப்போகிறாய்? என்று கேட்பேன். எம் ஜி ஆர், என் டி ஆர் காலம் வேறு. தற்போதைய காலம் வேறு. சினிமாவில் கிடைத்த பிரபலம் அரசியலுக்கு உதவாது" என்று பிரகாஷ் ராஜ் பேசினார்.