அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
AK64: பிரசாந்த் நீலுடன் கைகோர்க்கும் நடிகர் அஜித்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித்குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கிறார். இதனால் அடுத்தடுத்த படங்களை எதிர்பார்த்து நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கின்றனர்.
அஜித்துடன் இணையும் பிரசாந்த் நீல்?
இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் 64 வது திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Goat படத்தின் 3 வது பாடல் குறித்த அசத்தல் அப்டேட் இதோ; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
கேஜிஎப், கேஜிஎப் 2, சலார் என வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் பிரசாந்த் நீல், அஜித்துடன் இணையப்போவது பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.
#PrashanthNeel Updated His Profile Letter Board 🔥 #AK64 & #AK65 💥 pic.twitter.com/Yru7Q6jDKv
— BangaloreCityKingMakers (@BangaloreMakers) August 1, 2024
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 288 பேர் பலி., நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்திக் சார்பில் ரூ.50 இலட்சம் நிதிஉதவி.!