வயநாடு நிலச்சரிவில் சிக்கி 288 பேர் பலி., நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்திக் சார்பில் ரூ.50 இலட்சம் நிதிஉதவி.!



Actor Surya Jyothika Karthik gives Rs 50 Lakh INR to Kerala Govt 

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 288 க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கின்றனர். 150 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இந்திய இராணுவம், விமானப்படை, கப்பற்படை, தன்னார்வலர்கள் என பலரும் அங்கு மண்ணில் புதையுண்ட மக்களை மீட்டு வருகின்றனர். கொத்துக்கொத்தாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. 

அரசு கோரிக்கை

இதனிடையே, பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரளா மாநில மக்களுக்கு உதவி செய்ய, மாநில முதல்வரின் வங்கிக்கணக்குக்கு மக்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் நிதிஉதவி தந்து உதவலாம் என அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு, அதற்கான வங்கிக்கணக்கு விபரங்களும் அறிவிக்கப்பட்டன. கேரளா மாநில அரசின் பொது நிவாரண நிதிக்கு பலரும் பணம் அனுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: நீங்க தோத்துடீங்க சூர்யா.. வாயில என்னது அது? - சூர்யாவுக்கு எதிராக கொந்தளித்த பெண் அரசியல்புள்ளி..!

நடிகை மந்தனா நிதிஉதவி

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்து வரவேற்பு பெற்ற நடிகை ராஷ்மிகா ரூ.10 இலட்சம் நிதிஉதவி வழங்கினார். முன்னதாக நடிகர் விக்ரம் முதல் ஆளாக ரூ.20 இலட்சம் நிதிஉதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகுமார் குடும்பம் நிதிஉதவி

இந்நிலையில், நடிகர் சூர்யா நேற்று முன்தினமே தனது இரங்கலை பதிவு செய்திருந்த நிலையில், நடிகர் சூர்யா - ஜோதிகா, நடிகர் கார்த்திக் என நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினர் சார்பில் மொத்தமாக ரூ.50 இலட்சம் பணம் கேரளா முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "எங்கெல்லாம் அதர்மம் தலைதூக்குதோ அங்கெல்லாம் வருவான் இந்த அபிமன்யு" - வேதா படத்தின் அசத்தல் ட்ரைலர் இதோ.!