Goat படத்தின் 3 வது பாடல் குறித்த அசத்தல் அப்டேட் இதோ; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!



Vijay Starring GOAT Movie 3rd Single Update 

சைன்ஸ் பிக்சன் பாணியில் தயாராகி வரும் நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - கோட் திரைப்படம் (The Greatest of All Time GOAT), வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வழங்குகிறது. 

கோட் படத்தில் நடிப்பவர்கள்

கோட் திரைப்படத்தில் நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, யோகிபாபு, மோகன், ஜெயராம், லைலா, சினேகா, வைபவ், பிரேம்ஜி, ஜெயராம், விடிவி கணேஷ், பார்வதி நாயர் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். ரூ.300 கோடி செலவில் தயாராகி வரும் இத்திரைப்படம், தமிழ் உட்பட 4 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க: "எங்கெல்லாம் அதர்மம் தலைதூக்குதோ அங்கெல்லாம் வருவான் இந்த அபிமன்யு" - வேதா படத்தின் அசத்தல் ட்ரைலர் இதோ.!

படத்தின் பாடல் குறித்த அப்டேட்

இந்நிலையில், நாளை மறுநாள், அதாவது ஆகஸ்ட் 03ம் தேடி கோட் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகிறது. அதேபோல, நாளை காலை 11 மணியளவில் மற்றொரு முக்கிய அப்டேட் வெளியாகுவதாகவும் வெங்கட் பிரபு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் படிங்க: டிமாண்டி காலனி 2 படத்தின் ட்ரைலர் அறிவிப்பு; பேய் மிரட்டலுக்கு தயாராகுங்கள்.!