சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
நாளை சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்.! வெளிவந்த அறிவிப்பு.! மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த படத்தில் ஹீரோயினாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். பிரின்ஸ் திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
#PrinceTrailer from tomorrow 😊#Prince🕊️#PrinceOnOct21st #PrinceDiwali💥@anudeepfilm @maria_ryab @musicthaman @SVCLLP @SureshProdns @ShanthiTalkies pic.twitter.com/6KTKW3luYc
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 8, 2022