திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புதிய தொழிலை துவங்க உள்ள நடிகை பிரியா பவானி சங்கர்... அவரே வெளியிட்ட வீடியோ... குவியும் லைக்ஸ்கள்!!
தமிழில் நடிகர் வைபவ் உடன் இணைந்து மேயாதமான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இவர் இதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா, ஓமணப் பெண்ணே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரியா தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதாவது சொந்தமாக புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கவுள்ளதாகவும் அதனை விரைவில் திறக்க இருக்கிறாராம். தனது ரெஸ்டாரண்ட்டை வீடியோவாக எடுத்து பிரியா வெளியிட அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.