என் பலம், பலவீனம் நீங்கள்தான்.. முக்கியமான நாளில் க்யூட்டான புகைப்படத்துடன் பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் பதிவு.! குவியும் வாழ்த்துக்கள்!!



Priya wedding day wishes to atlee photo viral

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. ராஜாராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் தெறி, மெர்சல், பிகில் என தளபதி விஜய் நடிப்பில் ஹாட்ரிக் வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் அவர் தற்போது ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். 

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியாவை திருமணம் செய்து கொண்டார். அவரும் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இருவரும் தங்களது 8வது திருமண நாளை நேற்று கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் பிரியா ஹாப்பியாக கணவருடன் எடுத்த ரொமான்டிக்கான புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

அந்த பதிவில், எட்டு வருடங்கள் கடந்துவிட்டது. எப்பொழுதும் இதே மாதிரி இருக்கவேண்டும். எனது கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள். நீங்கள்தான் எனது பலவீனம். அதேபோல் நீங்கள் தான் எனக்கு பலமாகவும் உள்ளீர்கள். என்னுடைய எல்லாமே நீங்கள்தான். ஐ லவ் யூ என தெரிவித்துள்ளார். அந்த பதிவு வைரலான நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.