கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் இல்லை இவர் தான் - சர்ச்சையை ஏற்படுத்திய சசிகலா புஷ்பா!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். அவரை தொடர்ந்து அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என பலரும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான தளபதி விஜயின் அம்மாவின் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என கடிதம் எழுதி இணையத்தில் வெளியிட்டிருந்தார்.
ஆனால் தற்போது சசிகலா புஷ்பா அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் இல்லை சிவகார்த்திகேயன் தான் என புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் கஷ்டப்பட்டு வெள்ளிதிரைக்கு வந்து பிரபலமானவர்.
அது மட்டுமின்றி சிவகார்த்திகேயன் படத்தோடு விஜய் படத்தை வெளியிட்டால் அதில் அதிக வசூல் செய்வது சிவகார்த்திகேயன் படமாக தான் இருக்கும் என சசிகலா புஷ்பா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.