கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இனி நான் நடிக்க மாட்டேன். ராஜா ராணி செண்பா அதிரடி!
சின்னத்திரை என்றாலே சீரியல் என்றாகிவிட்டது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பிரபலமானா தொடர்தான் ராஜா - ராணி. நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் இனியானது நடிக்கும் இந்த தொடர் ரசிகர்கள் இடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமூகவலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஆல்யா மானசா விற்கு ஒரு தனி ரசிகர் பட்டலாமே உண்டு. இந்நிலையில், இவர்கள் சஞ்சீவ்-ஆல்யாவும் இணைந்து ஒரு
குறும்பட நடிக்க அது செம ஹிட்டாகியுள்ளது.
அண்மையில் ஒரு பேட்டியில் ஆல்யா மானசாவிடம் பட வாய்ப்புகள் வருகிறதா, என்னென்ன படங்கள் கமிட்டாகியுள்ளனர் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, எனக்கு சினிமா வாய்ப்புகள் வருகிறது, ஆனால், நான் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் அப்படி ஒரு ஆசை எனக்கு இல்லை.
முதலில் 3 படங்கள் நடித்தேன், அதில் ஒன்று மட்டும் வெளியானது. ஆனால், அப்படம் சரியாக ஓடவில்லை. என்னுடைய உயரத்தால் தான் எனக்கு ரீச் கிடைக்கவில்லையோ என்று எனக்கு தோன்றியது.
அதனால், நான் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் சீரியல், விளம்பரங்கள் என்று எல்லாம் நடிப்பேன் என்று தெரிவித்தாராம். இது ஆல்யா மானசா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.